கொரோனா தடுப்பூசிக்கான ரசீதை வீடு வீடாகச் சென்று வழங்கிய அமைச்சர் நாசர்
பட்டாபிராமில் கொரோனா தடுப்பூசிக்கான ரசீதை வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு அமைச்சர் நாசர் வழங்கினார்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 1லட்சம் பேருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பொருட்டு மாபெரும் முகாம் நடத்தப்பட இருக்கின்றது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதி பட்டாபிராம் பகுதியில் நடைபெற இருக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் பொருட்டு பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசிக்கான ரசீதினை பொதுமக்களுக்கு வழங்கினார் அமைச்சர் நாசர்.
இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.