திருவேற்காட்டில் பயணிகள் நிழற்குடை: அமைச்சர் ஆவடி பங்கேற்று திறப்பு

திருவேற்காட்டில் பயணிகள் நிழற்குடையை அமைச்சர் ஆவடி நாசர் திறந்தார்.

Update: 2023-03-20 10:42 GMT
திருவேற்காட்டில் பயணிகள் நிழற்குடையை அமைச்சர் ஆவடி நாசர் திறந்து வைத்தார்.

திருவேற்காடு நகராட்சி பகுதியில் 97 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் புதிய 2 பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பேருந்து  நிழயற்குடையை திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள 4.வது வார்டு கோலடி லட்சுமி நகரில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணி மற்றும் எட்டாவது வார்டு பி.ஜி.என் நகரில் உள்ள மகாலட்சுமி தெருவில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணியும் ஆவடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கோலடி மற்றும் வானகரம் பகுதியில் இரண்டு பேருந்து பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் திருவேற்காடு நகர தி.மு.க. செயலாளரும் நகர்மன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி, வரவேற்புரை ஆற்றினார் திருவேற்காடு நகராட்சி ஆணையர் எஸ்.ரமேஷ் நகராட்சி பொறியாளர் அ.பு.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளருமான ஆவடி நாசர் தலைமை வகித்து 2புதிய பூங்கா அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தும், இரண்டு பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.மேலும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பவுல், நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.சங்கர், வார்டு கவுன்சிலர் கே.பி.எஸ்.சுதாகர், வட்ட செயலாளர் ரங்கதுரை, நிர்வாகிகள் பரிசமுத்து, கோலடி சரவணன், பாண்டுரங்கன், உமாபதி, விநாயகம், தெய்வசிகாமணி, பி.வி.கே.கண்ணன், பிரதானம், கே.பி.எஸ்.இளையராஜா, இளங்கோ, தேவிஸ்ரீ, என்.ராஜி, நாராயணன், நரேஷ், உள்பட அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News