ஆவடி அருகே வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி: சாதனை படைத்த மாணவ, மாணவிகள்

World Oral Health Day: ஆவடி அருகே வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் வாய் கழுவும் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-06-16 03:30 GMT

World Oral Health Day:திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2586 தனியார் பள்ளி மாணவ மாணவிகள் அமர்ந்து வாய் கழுவும் திரவம் கொண்டு 15 நொடிகள் செய்து காட்டியது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி ஆவடி லயன்ஸ் கிளப் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி அடுத்த கோவில்பதாகை நசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது..

ஆவடி லயன்ஸ் கிளப் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நசரேத் பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு பயிலும் 2500 மாணவ, மாணவிகள் அமர்ந்து வாய் கழுவும் திரவம் கொண்டு 15 நொடிகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில் அதற்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர், உலக சாதனை புத்தக இயக்குனர் கிறிஸ்டோஃபர் கலந்து கொண்டு லயன்ஸ் கிளப் தலைவர் யுவராஜ், மற்றும் நசரேத் கல்லூரி முதல்வர் ஹென்ரி ஆகியோருக்கு வழங்கி கெளரவித்தனர்.

முன்னதாக ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு. நாசர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை திரவம் கொண்டு வாய் கழுவும் முறையை செய்து காட்டி துவக்கி வைத்தார்.. இந்த நிலையில் மாணவ மாணவிகள் வாய் கழுவும் முறையை செய்து காட்டியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.. இந்த நிகழ்ச்சியில் நசரேத் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News