ஆவடி அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவனுக்கு இப்படி ஒரு தண்டனை

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவனுக்கு தண்டனையாக 10 திருக்குறள் எழுதவைத்து, புத்தகத்தை பரிசாக வழங்கி அறிவுரை கூறி காவல் ஆய்வாளர் லாரன்ஸ் அனுப்பிவைத்தார்.

Update: 2021-12-10 02:00 GMT

பஸ்சின் கண்ணாடியை உடைத்தாக கூறப்பட்ட மாணவனுக்கு புத்தம் பரிசு வழங்கி அறிவுரைக் கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சில விரும்பத்தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர், கும்மிடிப்பூ ண்டி அடுத்த கவரப்பேட்டை பள்ளி மாணவி மற்றும் மாணவர் பள்ளி சீருடையில் ரயிலில் சாகசம் செய்தது அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் ஆவடியில் மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது என தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் பள்ளி மாணவர்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் ஆவடி பேருந்து பணிமனையிலிருந்து பட்டாபிராம் அருகே சிரஞ்சீவி நகர் நோக்கி சென்று கொண்டிருந்த S48 என்ற அரசு மினி பேருந்து சேக்காடு அரசினர் பள்ளி அருகே சென்றபோது மர்ம நபரின் தாக்குதலில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்தது இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனை பட்டாபிராம் காவல்துறை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்.

அவர் அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருவதாகவும் மாணவர் என்பது தெரியவந்தது பேருந்து மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை என்றும் தன்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்/

இதனை தொடர்ந்து மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் லாரன்ஸ் மாணவனை அழைத்து திருக்குறளை எழுதும் படி கூறினார். அதற்கு அந்த மாணவன் எழுதி காட்டிய பின்னர் மாணவனுக்கு அறிவுரை கூறி ஆத்திசூடி புத்தகம் பரிசாக வழங்கி இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது கூறி மாணவனை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். 

Tags:    

Similar News