சிறுமியை பாலியல் கொடுமை செய்த பாட்டு வாத்தியார் கைது
ஆவடி அருகே சங்கீதம் கற்க வந்த சிறுமியை பாலியல் கொடுமை செய்த பாட்டு வாத்தியாரை, போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.;
சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த, பாட்டு வாத்தியார் ‘போக்சோ’வில் கைது (கோப்பு படம்)
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் வசிக்கும் தம்பதி, அரசு வங்கியில் பணி செய்கின்றனர். இவர்களது மகள் பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். சிறுமி மாலை நேரங்களில் சங்கீதம் கற்றுக்கொள்ள பட்டாபிராம் அம்பேத்கர் நகர் அம்மன் கோவிலில் கோவில் பகுதியை சேர்ந்த சாமுவேல்(36) என்பவரிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக, சங்கீதம் கற்று வந்த நிலையில், சாமுவேலுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக சாமுவேல் மனைவி தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தனியாக இருந்த சாமுவேல், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் கொடுமை செய்துள்ளார். சிறுமியிடம் தனிமையில் இருந்ததை தன் செல்போனில் படம் பிடித்து, 'என்னிடம் இருந்தது போல், என் நண்பர்களிடமும் இருக்க வேண்டும். இல்லையெனில், இந்த வீடியோவை உன் பெற்றோருக்கு சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்,' என சிறுமியை மிரட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை மீண்டும் மீண்டும் மிரட்டி, தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி, சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் வழக்குப் பதிவு செய்த போலீசார் சாமுவேலை கைது செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.