திருவேற்காடு நகரில் முன்னாள் முதல்வர் நினைவஞ்சலி கூட்டம் அமைச்சர் பங்கேற்பு
திருவேற்காடு நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார்.;
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகரப் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பவுல் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு. நாசர் தலைமை வகித்தார். முன்னதாக முன்னாள் முதல்வரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்பு பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், அயன் பாக்ஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர், திருவேற்காடு நகர செயலாளர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.