திருநின்றவூர்: குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருநின்றவூர் நாச்சியார் சத்திரத்தில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்;
திருநின்றவூர் நாச்சியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர் தன் மனைவியுடன் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினையால் விரக்தியுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.