ஆவடியில் ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளை

ஆவடியில் ரயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-07-18 15:04 GMT

சென்னை, ஆவடி காமராஜ் நகர், 9வது தெருவை சேர்ந்தவர் ஆண்ட்ரூ (59), இவர் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மார்க்ரெட் (50) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்துடன் நெய்வேலியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில் வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தன. இதை அறிந்த அக்கம் பக்கத்து வீட்டார் ஆண்ட்ரூக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், ஆண்ட்ரூ நெய்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்து  பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த இருந்த 11 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் ஆண்ட்ரூ புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News