மாநகர பேருந்துகளில் நெரிசல், கொரோனா பரவும் அபாயம்.
மாநகர பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை ஆவடியில் இருந்து அம்பத்தூர் வழியாக கோயம்பேடு செல்லும் 77 சென்னை மாநகர பேருந்தில் பயணிகள் மூச்சு விடக்கூட முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் நிரம்பி வழிகிறது. பேருந்தில் சரியாக முறையாக டிக்கெட் கொடுக்க முடியாததால் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பஸ்சை நிறுத்தி நடத்துனர் பயணிகளிடம் டிக்கெட் கொடுப்பதை பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கிறது.
இதனால் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டு வருகிறது. பேருந்துகளில் கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் தவிர்க்கவும் இந்த வழித்தடத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.