ஆவடியில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் நாசர்
ஆவடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 917. மாணவி, மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதி வண்டிகளை முன்னாள் அமைச்சர் நாசர் வழங்கினார்.;
பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் நாசர் மிதிவண்டிகளை வழங்கினார்.
ஆவடியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 509 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை முன்னாள் அமைச்சர் ஆவடி.சாமு. நாசர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆவடி காமராஜ் நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கி பேசிய அவர் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் மற்ற அண்டை மாநிலங்களும் தமிழகத்தை பின்னோக்கி பார்க்கிறது என்றும். இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்றும் படைத்த இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை, பெண்களுக்கு பேருந்தில் கட்டணமில்லா பயணம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, ஒன்றல்ல இரண்டல்லமுதல்வர் செய்த சாதனைகளை குறித்து சொல்லிக் கொண்டே போகலாம் என்றார்.
இதனை தொடர்ந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 81.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 428 உட்பட 509.மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக பள்ளி மாணவியின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர் நாராயண பிரசாத் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.