மறந்து போன ஊரடங்கு விதிகள்...திருநின்றவூரில் கொரோனா பரவும் அபாயம்!

ஊரடங்கு விதிமுறைகளைமறந்துவிட்ட திருநின்றவூர் மக்களால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.;

Update: 2021-05-15 11:25 GMT

கொரோனாவை மறந்து சமூக இடைவெளியின்றி கடைகளில் கூட்டம் கூட்டமாக நிற்கும் மக்கள்

திருநின்றவூர் பகுதியில் மளிகை கடை, காய்கறி கடை போன்ற இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1048 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும்,பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வெளியே சுற்றி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை தடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News