கள்ளிகுப்பம் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் தீ விபத்து; 2 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் சேதம்

கள்ளிகுப்பம் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தது.

Update: 2021-07-14 13:20 GMT

கள்ளிக்குப்பம் ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் கடையில் நடந்த தீ விபத்து

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவர் அதே பகுதியில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

கடையில் இருந்து நேற்று மதியம் திடீரென கரும்புகை வந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் தீயணைப்புத்துறை வருவதற்கு காலதாமதமானது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முபாரக் அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரிகளை மடக்கி அதன் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மளமளவென எரிவதை பார்த்து அருகில் உள்ள மாதவரம், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள கார் உதிரி பாகங்கள் அனைத்தும் கருகி விட்டன. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News