பட்டாபிராம் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீவிபத்து
பட்டாபிராமில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீவிபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஆவடி அருகே பட்டாபிராமில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீவிபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் ஹிந்து கல்லூரியில் இயங்கி வரும் 16000 mva கொள்ளளவு 110/11 kv கொண்ட மின்பகிர்மான நிலையத்தில் இருந்து கோபாலபுரம், அமுதூர்மேடு, சேக்காடு, பட்டாபிராம், தண்டுரை, பாரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக பட்டாபிராம், தண்டுரை, அண்ணா நகர், சேக்காடு, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டனர்..
10.45 மணிக்கு ஏற்பட்ட தீவிபத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்பகிர்மான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.. கோடை காலம் தொடங்கிய நிலையில் தொடர்ந்து மின்சாரம் துண்டித்து மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் மின்பகிர்மான நிலைய தீவிபத்து மேலும் மக்களை சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும் தீவிபத்து தொடர்பாக பட்டாபிராம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.. கோடை காலத்தில் மின் பகிர்மான நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. தீவிபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சட்ட மன்ற உறுப்பினர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளனது. இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.