District Administrators Swearing In Ceremony மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு.
District Administrators Swearing In Ceremony ஆவடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.;
ஆவடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
District Administrators Swearing In Ceremony
இந்திய லோக்சபாவுக்கு அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே அதற்கான பணிகளைத் துவக்கி வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு கட்சியிலும் தேர்தல் பணியை நல்ல முறையில் கவனிக்க வேண்டிய நிர்வாகிகள் நியமனத்தில் ஒரு சில மாறுதல்களை அந்தந்த கட்சி தலைமை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் இதுவரை நிர்வாகிகளே இல்லாத பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளும் நியமனம் செய்யப்படுகின்றனர். கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் தமிழகத்தில் தற்போது நடக்க உள்ள லோக்சபா தேர்தலானது பெரும் மாற்றத்தினைத் தரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆவடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லயன் யுவராஜ் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பொறுப்புக்கான சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் காங்கிரஸ் ஆட்டோ தொழிற்சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து, 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக மாவட்ட பொதுச்செயலர் சிவகுமார் வரவேற்று பேசினார். இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தலைவர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தலைவர் ஆர்.எம்.தாஸ், ஆவடி பெருநகராட்சி முன்னாள் தலைவர் விக்டரி மோகன், மாநிலச்செயலர்கள் குணாநிதி, தரணிபாய் மாநில பொதுக்குழு உறுப்பினர் விக்டரி ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் ஹரிமுருகன் பகுதி தலைவர்கள் கோதண்டன்,அமீத்பாபு, சுரேஷ்குமார், சவுகத் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.