ஆவடி தபால் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு
ஆவடி தபால் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.;
ஆவடி தபால் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அரசு சார்ந்த அலுவலகங்கள் குறைந்த அளவு பணியாளர்கள் கொண்டு இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றது. மேலும் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது ஆவடி கேம்ப் தலைமை தபால் நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பான் மூலம் சுத்தம் செய்யும் பணி இன்று தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.