பருத்திப்பட்டு ஏரியில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு செயல் விளக்கப் பயிற்சி

வெள்ளப்பெருக்கு காலங்களில் தங்களை பாதுகாப்பது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது

Update: 2021-09-10 14:28 GMT

பருத்திப்பட்டு ஏரியில் வெள்ளப்பெருக்கு காலங்களில்  தங்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து தீயணைப்புத்துறையினரால் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி 

பருத்திப்பட்டு ஏரியில் வெள்ளப்பெருக்கு காலங்களில் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவ மழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவடி தீயணைப்பு மற்றும் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற இந்த பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆவடி தீயணைப்பு நிலைய அதிகாரி நவீன் செல்வன்  தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எப்படி தங்கள் உடைமைகளை பாதுகாப்பது என்பது குறித்தும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது குடம், தெர்மாகோல், பெரிய அளவிலான பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து பாதுகாப்பான இடங்களுக்கு எவ்வாறு தப்பிச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

மேலும், இந்த பொருட்களை பயன்படுத்தி வெள்ளப்பெருக்குகளில் இருந்து எவ்வாறு தப்பி செல்வது என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் செயல் விளக்கம்  செய்து காண்பித்தனர்.  மேலும், பள்ளி மாணவர்களை பலூன் படகு மூலம் ஏரிக்குள் கூட்டிச்சென்று ஒத்திகை செய்து காண்பித்தனர். இப்பயிற்சி ஒத்திகை  குறித்து,  மாணவர்கள் கூறுகையில், பேரிடர் காலங்களில் தங்களிடம் உள்ள  உடமைகளை வைத்து, எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும்  தெரிவித்தனர்.

Tags:    

Similar News