மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி சான்று வழங்கும் நிகழ்ச்சி
திருநின்றவூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி சான்றுகளை அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்.;
திருநின்றவூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர் நாசர் வழங்கினார்.
திருநின்றவூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி சான்றுகளை அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களை கடந்த 31.03.21 வரை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி சான்று வழங்கும் நிகழ்ச்சி திருநின்றவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி அனைவரையும் வரவேற்றார். பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மு.முருகன், நகர மன்ற தலைவர் உஷாராணி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 1227 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 13,620 பயனாளிகளுக்கு அசல்,வட்டி என மொத்தம் 30.96 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்ததற்கான சான்றுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்துவரும் முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இந்தியாவிலேயே இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தான் நடைபெறுகின்றன.எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத மகளிர் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருபவர் மு.க.ஸ்டாலின். மக்களின் நலன்களுக்காக ,குறிப்பாக மகளிர் நலன்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்பவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான்.
இவ்வாறு அமைச்சர் ஆவடி நாசர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட அவைத் தலைவர் இராஜி, திருநின்றவூர் நகர கழக செயலாளர் ரவி, துணைப் பதிவாளர்கள் பா.காத்தவராயன் கருணாகரன், இரா.ரவி, ராஜ நந்தினி, சார்பதிவாளர்கள் விஜய் சரவணன்,சண்முகம், சுரேஷ்குமார், இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ராம்குமார், திருநின்றவூர் நகர்மன்ற துணைத்தலைவர் சரளா நாகராஜ், நிர்வாகிகள் கவுன்சிலர்கள ரவி, பாபு, குணசேகரன், அன்பழகன், தங்கராஜ், கமலக்கண்ணன், உஷாராணி வெங்கடேசன், சசிகலா, சந்தோஷ்குமார் ஜெயக்குமார், ஜெ.விஸ்வநாதன், சரவணன், அசோக்குமார், மோகனகிருஷ்ணன், பாபு, ஜீவானந்தன், சாலிம், பி.எல்.ஆர்.யோகா, நெமிலிச்சேரி கே.சுரேஷ், எஸ்.குணசேகரன், பா.கந்தன், ஜெ.சாக்ரடீஸ், கே.சுரேஷ்குமார், ஜி.சி.சி.கருணாநிதி, செந்தாமரை, மோகன் உள்பட கழக நிர்வாகிகள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.