சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை
ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை போக்குவரத்து காவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுற்றுப்பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளை போக்குவரத்து காவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து பறிமுதல் செய்து மாநகராட்சி மாட்டு கொட்டகையில் அடைத்தனர்.
கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டும் சம்பவங்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துகளும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவங்கள் நாள்தோறும் அதிக அளவில் நடந்து வரும் நிலையில். அதன் கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோவர்த்தனகிரி ஆவடி மார்க்கெட் ஆவடிபேருந்து நிலையம் திருமுல்லைவாயில் போன்ற பகுதிகளில் ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் மொய்தீன் மற்றும் ஆவடிபோக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆப்பிரகாம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களும், போக்குவரத்துக் காவலர்களும் இணைந்து சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து ஆவடிமாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைத்தனர்.
அதன்பின்னர் மாட்டினை உரிமை கொண்டு வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். பின்பு உரிமை கொண்டாட இயலாத கால்நடைகளை திருவள்ளூரில் அமைந்துள்ள கோ சாலையில் அடைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.உடன் ஆவடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் சக போக்குவரத்து காவலர்களும் மாநகராட்சி ஊழியர்களும் உடன் இருந்தனர்.