ஆவடி: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த பெண்ணின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தம்பதியினர் கைது

ஆவடி பஜார் பகுதியில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த பெண்ணின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-13 10:31 GMT
பைல் படம்

ஆவடி பஜார் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை விமர்சித்த பெண்ணின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சைக்கிளில் செல்வதை விமர்சித்து அனைத்து மக்கள் கட்சி அரசியல் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து நேற்று ஆவடியில் வர்த்தக துளிர் அமைப்பு தலைவர் டில்லி ராஜ் மற்றும் அவரது மனைவி உஷா நந்தினியும் ராஜேஸ்வரியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

அப்போது ஆவடி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News