ஆவடியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணிகளுக்கு பூமி பூஜை
ஆவடி மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை புதிய தார் சாலையாக மாற்றுவதற்கான பூமி பூஜையை நாசர் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்.;
ஆவடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை நாசர் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
ஆவடி அருகே 5கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சேதமடைந்த சாலைகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணியை த சட்ட மன்ற உறுப்பினர் நாசர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 6வது மாநில நிதிக்குழு மானியம் 2023-24 ன்(நிலுவை தொகை) கீழ் 10கிமீ தூரம் உள்ளடக்கிய 32 சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தங்கள் அளித்து பணி உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஆவடி மநகராட்சிகுட்பட்ட 44வது வார்டு காமராஜர் நகர், 5வது தெருவில் 25.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, வார்டு 23வது காந்திநகர், செக் போஸ்ட் விவேகானந்தா தெரு புதிய தார் சாலை அமைக்கும் பணி ரூபாய் 15.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, வார்டு 18வது அண்ணா சாலை, பாபு நகர் பட்டாபிராம் பகுதியில் 21 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி, வார்டு 3வது மிட்டினமல்லி உயர்நிலைப்பள்ளி தெரு வைகோ தெருவில் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, வார்டு 29வது சரஸ்வதி பிரதான சாலை திருமுல்லைவாயல் 59.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, வார்டு 27 பாரதி நகர் 8வது தெரு 25.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இனிப்புகளை வழங்கிய ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசரிடம் பொது மக்கள் தினசரி வழங்கி வரும் குடிநீரின் நேரத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.விரைவில் நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார்.இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பேபிசேகர், ஜி.நாராயண பிரசாத், ஜி.நாராயணபிரசாத், பொன்விஜயன்,
பகுதி செயலாளர் ராஜேந்திரன் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.