திருவள்ளூரில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 ஐ முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்து கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் 100 சதவீதம் வாக்கு அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாதிரி வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு பதிவினை மேற்கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.