ஆவடியில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை கொள்ளை
ஆவடி அருகே பட்டப்பகலில் வீட்டை பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி அருகே வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பட்டப்பகலில் வீட்டை பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் அருணாச்சலம் நகர் 2வது தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் (43). இவருக்கு ஜெயக்குமாரி மனைவி மற்றும் மகன் தமிழரசன் ஆகியோர் உள்ளனர். ராதாகிருஷ்ணன் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயக்குமாரி காெராேனா தொற்று ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மகன் தமிழரசு ராதாகிருஷ்ணன் மட்டும் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் ராதாகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு மகன் தமிழரசை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலை நிமித்தமாக தொழிற்சாலைக்கு கிளம்பிச் சென்றார். இதனை அடுத்து மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய தமிழரசு வீட்டின் கதவை உடைக்கப்பட்டது பார்த்து அதிர்ச்சியடைந்து தந்தை ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்த விரைந்து வந்து ராதாகிருஷ்ணன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த பீரோ அறையை உடைத்து அதில் இருந்த 16 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. ராதாகிருஷ்ணன் இதுகுறித்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர் குழுவை வர வைத்து கைரேகைகளை சேகரித்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.