ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இலவச மருத்துவ முகாம்

ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணி மருத்துவ முகாமில் காவலர்கள், பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.;

Update: 2021-08-24 14:43 GMT

சென்னை ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணி சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.

சென்னை ஆவடி அடுத்த வீராபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணி சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண், இதய பிரச்சனை, எலும்பு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கமாண்டர் ரவிச்சந்திரன், மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமாண்டர் ரவிச்சந்திரன்:- காவல் சிறப்பு படை 3ம் அணியில் பொதுமக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணியில் 99% காவலர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்தவர் காவல் சிறப்பு படை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

Tags:    

Similar News