போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கி நன்றி கூறிய ஆவடி காவல் ஆணையர்

ஆவடியில் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று வேலைபார்க்கும் போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கி ஆவடி காவல் ஆணையர் நன்றி கூறினார்.;

Update: 2022-03-05 01:30 GMT

ஆவடியில் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று வேலைபார்க்கும் போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கி ஆவடி காவல் ஆணையர்.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளதால், சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பாடி மேம்பாலம் அருகில் போக்குவரத்து காவலர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து காவலர்களை நேரில் பார்த்து பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் தினமும் வெயிலில் பணிபுரிவோருக்கு நீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் இளநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் விஜயகுமாரி ஆகியோர் கலந்துகொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் போக்குவரத்து காவலர்களுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், கடும் வெயில் காலங்களில் மக்களுக்காக பணியாற்றும் காவலர்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News