வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்...

இறந்தவர்களின் உடலை எரிக்க...

Update: 2021-05-12 06:34 GMT

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருத்துவமனைகளில் போதிய வசதி படுக்கை மற்றும் ஆக்சிஜன் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே சிகிச்சைக்கான ஏராளமானோர் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் காட்சிகளை தினந்தோறும் காணும் நிலையில், உயிர் பிழைக்க மருத்துவமனைக்குச் செல்லும்போதுதான் இந்த நிலை என்றாலும் சிகிச்சை பலனின்றி இறந்து போனவர்களின் உடலை புதைப்பதற்கு ம் எரிப்பதற்கும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அயப்பாக்கம் பகுதியில் கொரோனாவால் இழந்து போனவர்களின் உடலை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் வாகனத்தில் நீண்ட நேரம் உறவினர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுடுகாட்டின் முன்பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றதை காணமுடிகிறது. ஒரு உடலை எரிப்பதற்கு சுமார் 2 மணி நேரம் 3 மணி நேரம் ஆவதால் உடலை எதிர்ப்பதற்கும் புதைப்பதற்கும் நீண்ட நேரம் ஆகிறது.

இதனால் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் சுடுகாட்டின் முன்பு நிற்பதும், இந்த உடல்களை எரிக்க போதிய வசதிகள் செய்து தரவேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News