விமானப்படை பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை

சென்னை ஆவடியில் விமானப்படை பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியா தனக்குத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-23 10:15 GMT

தற்கொலை செய்து கொண்ட காளிதாஸ்.

ஆவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர் ஏ கே 47 ரக துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்,(வயது 55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஆவடி விமானப் படையில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஜீவஸ்ரீ உள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். காளிதாஸ் கடந்த இரு தினங்களாக, 8.ஆம் எண் கொண்ட விமானப்படை டவரில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை, 3:55 மணியளவில், பணியில் இருந்த போது, அவர் பயன்படுத்தி வந்த 'ஏ.கே. 47' ரக கை துப்பாக்கியால், தொண்டையில் தனக்கு த்தானே சுட்டுக்கொண்டதில் மூன்று தோட்டக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அவரை மீட்ட விமானப்படையினர் இது குறித்து ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து எதனால் தற்கொலை செய்து கொண்டார் குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

Tags:    

Similar News