ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி
ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜ் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கட்டுமான கூலித்தொழிலாளி சீனிவாசன் (52) இவர் வழக்கம் போல் காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். அப்போது மற்றொரு கூலித்தொழிலாளியுடன் சீனிவாசன் ரயில் வருவதை கவனிக்காமல் பேசியவாறு ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயில் சீனிவாசன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.