திருமுல்லைவாயிலில் 20 சவரன் நகை, ரூ. 1லட்சம் பணம் கொள்ளை: மர்ம நபருக்கு போலீசார் வலை

திருமுல்லைவாயில் அடுக்குமாடி குடியிருப்பில் 20 சவரன் நகை, ரூ. 1லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை; மர்ம நபருக்கு போலீசார் வலை.;

Update: 2021-08-05 10:11 GMT

திருமுல்லைவாயில் ஆர்.சி. அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி இவரது கணவர் ராமலிங்கம். இவர்களது 3 மகன்கள் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் வசந்திக்கு டிரைவராக வினோத், பணிப்பெண்ணாக அஞ்சலி ஆகியோரும் உள்ளனர். வசந்தியின் வீட்டு பீரோ நேற்று மாலை திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த  தங்க நகைகள் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வசந்தி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் பீரோவில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் கொள்ளை செயலில் ஈடுபட்டது வீட்டில் வேலை செய்யும் நபர்களா அல்லது வெளியிலிருந்து வந்தவர்களா என கண்காணிப்பு கேமரா மூலமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News