ஊடகங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்குதனியார் கண் மருத்துவமனை சார்பில் உணவு பொட்டலங்களோடு நலத்திட்டங்கள்...

ஆவடியில் ...;

Update: 2021-05-12 12:00 GMT

ஆவடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள் உண்ண உணவின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆவடி போரா கண் மருத்துவமனை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இதனை ஆவடி காவல் உதவியாளர் சத்தியமூர்த்தி பொது மக்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து இரவு பகல் பாராமல் தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும் பெண்களுக்கு உணவு மற்றும் புடவைகள் வழங்கப்பட்டன. இதில் போரா கண் மருத்துவமனை இயக்குனர்கள் உடனிருந்தனர்.

இந்த ஊரடங்கு முடியும் வரை ஆவடி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை எளிய மக்கள் 2000 பேருக்கு, தினமும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று போரா கண் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News