"மின் துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா தமிழக அரசு" - எல். முருகன் குற்றச்சாட்டு
"மின் துறையை தனியார் மயமாக்க தமிழக அரசு முயற்சிக்கிறதா என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.;
தமிழக அரசு மின்சார துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளர்.
பாஜக சார்பாக முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எல். முருகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஏழை எளிய, மக்களை வதைக்காத வகையில் மின் கட்டணத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தமிழக அரசு மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு முயற்சிக்கிறதா அல்லது தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்க திட்டமிடுகிறா என்று நினைக்க தோன்றுவதாக எல். முருகன் கூறினார்.