நோய் கட்டுப்பாட்டு அறையில் கபசுர குடிநீர்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருமுல்லைவாயில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு அறையில் கபசுர குடிநீர் தயாரிப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Update: 2021-04-30 07:14 GMT

தமிழகத்தின் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது அதிகமாக பரவி வரும் இந்த சூழலில், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள பச்சையப்பன் கோவில் அருகில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கபசுரக் குடிநீர் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் சுத்தமாக தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து திருவள்ளூர் மாவட்டநகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் தயாரிக்கும் இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News