ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பு: லாவகமாக பிடித்த இளைஞர்கள்

ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பை இளைஞர்கள் லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்;

Update: 2021-09-28 17:18 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ராஜக்கல் கெங்கையம்மன் கோயில் பகுதியில் தெருவில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுமார் 4 அடி நீளம் கொண்ட மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதைக் கண்டு கூச்சலிட்டனர்.

பின்னர் அந்த ஊர் இளைஞர்கள் மண்ணுளிப் பாம்பை லாவகமாக  பிடித்து ஆம்பூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மண்ணுளிப் பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று சங்கராபுரம் காப்பு காட்டில் விட்டனர்.

Tags:    

Similar News