ஆம்பூர் பகுதியில் வியாபாரிகள் போராட்டம்
ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க அனுமதிக்க கோரி வியாபாரிகள் போராட்டம்
கொரோனா நோய் தொற்றை குறைக்கும் நடவடிக்கையாக, ஆம்பூர் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மார்க்கெட் பகுதியில் கடைகளை திறந்து வியாபாரம் செய்யவேண்டாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆம்பூரில் மட்டும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மார்க்கெட்டை திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி இன்று காய்கறி மற்றும் மளிகை கடை வியாபாரிகள் பாங்கி மார்க்கெட் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் விரைந்து வந்த வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடனடியாக காய்கறி மற்றும் மளிகை கடை மார்க்கெட் திறந்து வியாபாரம் செய்ய அனுமதித்தனர்.
அப்போது காய்கறி வியாபாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சங்கங்களால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது, இனி சங்கங்கள் வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது