ஆம்பூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியுடன் வாகனம் பறிமுதல்
ஆம்பூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை;
ஆந்திராவுக்கு அரிசி கடத்தி சென்ற வாகனம் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியிலிருந்து ஆந்திராவுக்கு பிக்கப் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் உடனடியாக அரிசி கடத்தல் வாகனத்தை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதை தொடர்ந்து ஆம்பூர் நகர காவல் துறையினர் விரைந்து சென்று கன்னிகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 2 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகனத்தை ஓட்டி வந்த ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த உஸ்மான் மற்றும் அவருடன் இருந்த ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த அர்ஷத் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்