ஆம்பூர் அருகே மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளானது.
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றிவந்த சரக்கு வாகனம் ஆம்பூரில் விபத்துக்குள்ளானது.;
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றிவந்த சரக்கு வாகனம் ஒன்று, ஆம்பூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு வேலி மீது மோதி விபத்துகுள்ளானது. இதனால் பல லட்சம் மதிப்பிலான உயிர்காக்கும் மருந்துகள் சாலையோரம் கொட்டிக் கிடந்தன. வாகனத்தை ஓட்டி வந்த கோயம்புத்தூர் சூலூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அருண் பிரகாஷ் (வயது 25 ) படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வாகனத்தை அப்புறப்படுத்தி வேறு ஒரு வாகனத்தில் மருந்துகளை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்