ஆம்பூர் கூலித் தொழிலாளி பெயரில் இரு கம்பெனிகள்; வணிக வரித்துறையினர் விசாரணை

ஆம்பூர் அருகே கூலிyf தொழிலாளியிடம் வணிக வரித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.;

Update: 2021-08-31 17:13 GMT

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே  மிட்டாளம் ஊராட்சி, மேல்மிட்டாளம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணி (50). இவர் சின்னவரிக்கம் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இன்று வேலூரில் இருந்து வந்த வணிக வரித்துறை அதிகாரிகள் கிருஷ்ணவேணியின் முகவரியை ஊரில் விசாரித்துள்ளனர்.  அப்போது அதிகாரிகள் ஊர் மக்களிடம் கோவிந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணிக்கு சொந்தமான பழைய இரும்பு தளவாடங்கள் விற்கும் நிறுவனம் மற்றும் தோல் பொருட்கள் விற்கும் நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது.

கம்பெனி கணக்கு வழக்குகளை முறையாக பராமரிக்காமல், வணிக வரித்துறைக்கு கட்ட வேண்டிய வரி பாக்கியை கட்டாமல் ஏமாற்றி வருகிறார். அதனால் அவரிடம் விசாரிக்க வந்துள்ளோம் என அதிகாரிகள்  கூறியுள்ளனர்.

தோல் தொழிற்சாலையில் கோவிந்தசாமியும், காலணி தொழிற்சாலையில் அவரது மனைவி கிருஷ்ணவேணியும் அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும்போது, அவர்களுக்கு எப்படி கம்பெனிகள் இருக்குமென வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவிந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணியின் ஆதாரங்களையும், ஆவணங்களையும் முறைகேடாக யாரோ ஒருவர் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

முறைகேடாக ஆவணங்களைப் பயன்படுத்தி வணிகவரித்துறை ஏமாற்றி மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவிந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணிக்கும் , சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அறிக்கை பெறப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்கு அழைக்கும் போது வந்து ஒத்துழைக்குமாறு கிருஷ்ணவேணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூலித்தொழிலாளியின் வீட்டை வணிக வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News