ஆம்பூர் அருகே வெற்றி பெற்றவுடன் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த ஊராட்சி தலைவர்
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஆன உடன் உடனடியாக மக்கள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த தலைவர்.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சின்னவரிக்கம் ஊராட்சியில் இரண்டு வாரங்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது என்பதை கண்டறிந்த புதிதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னவரிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபான நவீன் குமார் அவர்கள் சொந்த செலவில் டிராக்டர் மூலம் குடிநீர் வசதி ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் அப்பகுதிக்கு நிரந்தரமாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். ஊராட்சி மன்ற தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்த உடன் அப்பகுதிக்குச் சென்று மக்களின் குறைகளை தற்பொழுது நிறைவேற்றியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.