ஆம்பூரில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஆம்பூரில் இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபரை கைது செய்து 10 இருசக்கர வாகனம் மீட்டு உமராபாத் போலீசார் நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன
இந்நிலையில் இரு சக்கர வாகனம் கொள்ளையனை பிடிப்பதற்காக ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை அமைத்து கொள்ளையனை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தனிப்படை காவல்துறையினர் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகன ஓட்டியை துரத்திசென்று பிடித்து விசாரணை செய்தபோது அவர் நரியம்பட்டு பகுதியை சேர்ந்த முகமது முஜாஹித் என்பதும், அவர் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.
அவரிடமிருந்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மீட்டு உமராபாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூரில் 80 புல்லட் கொள்ளையடித்த வழக்கு, தமிழகத்தில் 10 இருசக்கர வாகனம் திருடிய வழக்கு மற்றும் 1 வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது இதுவரையில் 100 இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளையன் என்பது குறிப்பிடத்தக்கது