ஆம்பூர் அருகே மணல் கடத்தல்

ஆம்பூர் அருகே ஆம்னி வேன், மாட்டுவண்டி மூலம் மணல் கடத்தல். மணல் மூட்டைகள் பறிமுதல், இருவர் கைது

Update: 2021-06-19 14:30 GMT

ஆம்பூர் அருகே மணல் கடத்தல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியிலுள்ள பாலாற்றில் இருந்து ஆம்னி வேன் மூலம் மணல்  மூட்டைகளில் நிரப்பி வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில், போலீஸார் மாதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்து சோதனை  மேற்கொண்ட போது அதில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து  ஆம்னி வேன் ஓட்டிவந்த உடைய ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அங்கு மாட்டுவண்டியில்  மணல் கடத்தி வந்த மேலும் ஜெயக்குமார் என்பவரையும் கைது செய்து மணலுடன் மாட்டு வண்டி, ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News