ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்து வருவதாக ஆம்பூர் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வருவாய்த்துறையினர் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரகுமான் பாஷா, மற்றும் முகம்மது சயான் ஆகியோர், கடையில் கோழி இறைச்சி விற்பனை செய்தது கொண்டிருந்ததை அடுத்து 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து உத்தரவை மீறி கடைகள் திறந்து விற்பனை செய்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்