அண்ணாத்த படத்துக்கு இலவச டிக்கெட்: அசத்திய ரஜினி ரசிகர்கள்

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் அண்ணாத்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கிய ரஜினி ரசிகர்கள்

Update: 2021-11-04 04:51 GMT

பிளாஸ்டிக் கழிவுகளை பெற்றுக்கொண்டு அண்ணாத்த டிக்கெட் வழங்கும் ரஜினி ரசிகர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் திரையரங்கில் ரஜினி காந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ஆம்பூர் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு அண்ணாத்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

அறிவிப்பை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் சிலர் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுத்து சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். சுமார் 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பெற்றுக்கொண்ட ரஜினி ரசிகர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்தவர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் வெளியாகும் நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் திரையரங்குகளில் வாழை மரங்கள், பேனர்கள் தோரணங்களை கட்டி பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

நிகழ்ச்சியை சுதா குமார் தலைமையில் டியர் அமைப்பு,  சையஸ் அறக்கட்டளை, ரஜினி மன்ற ரசிகர்கள் மற்றும் லண்டனில் வசிக்கும் ரஜினி ரிசிகன் சதிஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News