ஆம்பூர் அருகே கரும்புத் தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
ஆம்பூர் அருகே கரும்புத் தோட்டத்தில் அறுவடையின் போது சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் சந்தோஷ், பாலாஜி என்பவர்களின் நிலத்தில் இன்று கரும்பு அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மலைப்பாம்பு இருப்பதைக் கண்ட பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் வந்த தீயணைப்புத் துறையினர் லாவகமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.