நெற்பயிர் அறுவடை வயலில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு
ஆம்பூர் அருகே நிலத்தில் நெல்அறுவடை செய்து கொண்டிருந்த போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு பெண் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பாரதி நகர் பகுதியில் விவசாயி ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெற்பயிர் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிலத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பார்த்து பெண் தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
தகவலின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலத்தில் இருந்த சுமார் 12 அடி நீலமுள்ள மலைப் பாம்பை பிடித்து ஆம்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.