ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்
ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு துவங்கியது;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 25 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 25 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 24 வது வார்டு 47 M வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு துவங்கியது.
அதன் பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் வாக்களித்தனர்.