ஆம்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது
ஆம்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 100 சாராய பாக்கெட்கள் பறிமுதல்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கள்தூர்கம் சுட்டகுண்டா மலை பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று சின்னகொல்லகுப்பம், இளையநகரம், தும்பேரி, அண்ணாநகர், உமராபாத், சுட்டகுண்டா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ரகு மனைவி கோவிந்தம்மாள் (வயது 45) என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 பாக்கெட் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்