ஆம்பூரில் மணல் கடத்திய இருவர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆம்பூரில் கள்ளத்தனமாக மணல் கடத்தி வந்த இருவரை கைது செய்து இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்;
மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாலாற்றில் இருந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக மணல் கடத்தி வந்த கீழ்முருங்கை பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 32) மற்றும் ரமேஷ் (வயது42) ஆகிய இருவரைகைது செய்தனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து ஆம்பூர் கிராமிய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்