இருசக்கர வாகனத்தில் புகுந்து போக்கு காட்டிய விஷபாம்பு
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்து போக்கு காட்டிய விஷபாம்பை ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியில் தபால் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி இருந்தனர். அப்போது, சாலையோரம் சுமார் இரண்டு அடி நீளமுள்ள விஷ பாம்பு (கொம்பேரி மூக்கன்) பாம்பு ஒன்று வேகமாக சென்று உள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அந்த பாம்பானது தபால் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினருக்கு பாம்பு இரு சக்கர வாகனத்தில் இருந்து வெளியே வராமல் வாகனத்திற்கு உள்ளே புகுந்து சுமார் ஒரு மணி நேரம் போக்கு காட்டியது
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் இருசக்கர வாகனத்தின் பாகங்களை பிரித்து உள்ளே புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து ஆம்பூர் அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விட்டனர்.