ஆம்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தொடர் மழை காரணமாக  சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு. ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை

Update: 2021-11-12 13:56 GMT

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த உமாபதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியில்  விவசாய நிலத்தில் வசித்து வருபவர் உமாபதி.  இவர் இன்று தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தொடர் மழை காரணமாக திடீரென மாட்டு கொட்டகை அருகே உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இடிபாடுகள் சிக்கிகொண்ட உமாபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  தகவல் அறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News