ஆம்பூரில் ரயிலில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
ஆம்பூரில் ரயிலில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது; 46 மதுபாட்டில்கள் பறிமுதல்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில் மூலமாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்துவது வாடிக்கையாகிவிட்டது . இந்நிலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீசார் ரயிலில் சோதனை செய்தனர்.
அப்போது ஆம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது, அவர் கொண்டுவந்த பையில் வெளிமாநில 46 மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களையும் கைதானவரையும், வாணியம்பாடி மதுவிலக்கு போலீசாரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.