ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு

Update: 2021-06-18 15:49 GMT

ஆம்பூர் அருகே விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் கடந்த 15ஆம் தேதி தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி ரமேஷ் என்ற தொழிலாளி உயிரிழந்தார் மேலும் ரத்தினம் மற்றும் பிரசாத் ஆகிய தொழிலாளி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன்,திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,வருவாய் துறையினர், தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டி பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து நாளை விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்

Tags:    

Similar News